கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் 11 கோடியே 89 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்ட தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தை (@tn_factcheck) புதிய அரசு முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வலுவான குரல்கள் எழுந்துள்ளன.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனி அலுவலகம், 80 ஊழியர்கள், அரசு வாகனம் என அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அதன் மிஷன் டைரக்டர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல நழுவிச் சென்றிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆரம்பச் செலவுகளுக்கு 1.24 கோடி ரூபாயும், பின்னர் ஆண்டுக்கு 3.55 கோடி ரூபாயும் என மொத்தம் 11-கோடிக்கு மேல் மக்கள் பணம் விரயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த யூனிட் செய்த பணிகள் என்ன, அதனால் பொதுமக்கள் அடைந்த பயன்கள் என்ன என்பதைப் புதிய அரசு முழு ஆய்வுக்கு உட்படுத்திப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தகவல் சரிபார்ப்பகத்தில் எந்தவொரு உருப்படியான பணியையும் செய்யாத ஐயன் கார்த்திகேயன் என்பவரிடம் தற்போது திமுக ஐடி விங் (DMK IT Wing) பொறுப்பை ஒப்படைக்க இருப்பதாக வெளியாகும் தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் மிக மோசமான மற்றும் முட்டாள்தனமான முடிவாகப் பார்க்கப்படுவதாகவும், இப்போதாவது இந்த ஒட்டுமொத்த அமைப்பின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

