தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறையின் (Department of Human Resources Management) அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வரும் ஜூன் 1-ஆம் தேதி (01.06.2026) முதல் பயோமெட்ரிக் (Bio-metric) அல்லது முகம் அடையாளம் காணும் ‘ஃபேஸ் ஐடி’ (Face ID) வருகைப்பதிவு முறையை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி, துறையின் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் காலை 10.00 மணிக்குள் தவறாமல் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்றும், தங்களின் வருகையை பயோமெட்ரிக்/ஃபேஸ் ஐடி முறையில் பதிவு செய்வதோடு, மறு உத்தரவு வரும் வரை வழக்கமான மேனுவல் (Manual) வருகைப்பதிவேட்டிலும் தங்களின் கையொப்பத்தைப் பதிவு செய்து வருகையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு அலுவலகங்களில் நேர மேலாண்மையை மேம்படுத்தவும், பணியாளர்களின் வருகையைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.-

