Wednesday, March 11, 2026
HomeUncategorizedமழைக்கான விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளி உண்டு - அமைச்சர் அன்பில் மகேஷ் 

மழைக்கான விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளி உண்டு – அமைச்சர் அன்பில் மகேஷ் 

சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இக்கண்காட்சிக்கான இலச்சினையையும், நிகழ்ச்சி நிரலையும் வெளியிட்டார். 

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: 

தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன. அந்த விடுமுறை விடப்படும் நாட்களை எவ்வாறு ஈடுசெய்ய போகிறீர்கள்? அதற்கு எதுவும் திட்டம் இருக்கிறதா? என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். 

அதற்கு அவர், பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே மழைக்காலத்தில் விடப்படும் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய தேவைப்படும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments