Tuesday, April 21, 2026
HomeUncategorizedதமிழகத்துக்கு ‘கிரிமினல் டூர்’ வரும் வடமாநில கொள்ளையர்கள்

தமிழகத்துக்கு ‘கிரிமினல் டூர்’ வரும் வடமாநில கொள்ளையர்கள்

தமிழகத்தில் வங்கி மற்றும் ஏடிஎம்களில் கொள்ளையடிக்க வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ‘கிரிமினல் டூர்’போல வரும் அதிர்ச்சி தகவல், ஏடிஎம் கொள்ளை வழக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் ஹரியானா மாநிலத்திலிருந்து கார், கன்டெய்னர் லாரியில் தனித்தனியாகச் சுற்றுலா வருவதுபோல தமிழகத்துக்குள் வருவார்கள்.

இதனால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வருவதில்லை. இவர்கள் வெளியில் எங்கும் தங்குவதில்லை. லாரியில் இரவில்தங்கிக்கொண்டு, அங்கேயே உணவு தயார் செய்து சாப்பிடுவார்கள்.

ஆள்நடமாட்டம் இல்லாதஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் கொள்ளையடித்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் கன்டெய்னர் லாரியில் காரை ஏற்றிக் கொண்டு தப்பிவிடுவர்.

இவர்கள் ‘கிரிமினல் டூர்’ குற்றவாளிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments