Monday, April 20, 2026
HomeUncategorizedஉலக இதய தினம்

உலக இதய தினம்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பாதிக்கக் கூடியதாக இதய நோய் உள்ளது. இதய நோய் வருமுன் காக்க யோகா, தியானம், சத்தான உணவு, நற்சிந்தனைகள், சரியான தூக்கம் போன்றவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நிலையில், இதய நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது

இதயம் தொடர்பான விழிப்புணர்வின் முக்கியத்துவம் இதயம் மனித உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும்,

இதயம் செயலிழந்தால் மரணத்திற்கு வழிவகுக்கும், எனவே ஒவ்வொருவரும் இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம்.

இருதய ஆரோக்கியம் மற்றும் சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், இருதய நோய்கள் (CVDs) உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

ஆண்டுதோறும் சுமார் 1.7 கோடி பேர் இருதய நோயால் இறக்கின்றனர், இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31% என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் ஆகியவை இருதயக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மிகவும் பொதுவான காரணங்கள் ஆகும்.

இந்த மூன்று இதயக் கோளாறுகளே, இருதய நோய்களால் ஏற்படும் மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 85% மரணங்களுக்குக் காரணமாகின்றன.

எனவே, இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தீவிரமாக பங்கேற்க மற்ற அமைப்புகளை ஒன்றிணைப்பதில் உலக இதய தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments