Saturday, April 18, 2026
HomeUncategorizedஅயோத்தி ராமர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவை மாற்ற நடவடிக்கை

அயோத்தி ராமர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவை மாற்ற நடவடிக்கை

உத்தரபிரதேசம் அயோத்தி ராமர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவை மாற்றி அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அந்த கோவிலின் ராம் ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் பேசுகையில், ‘கோவில்களுக்கு வழங்கப்படும் நெய்யின் தரம் கவலை அளிக்கிறது. எனவே, கோவில் பிரசாதங்களை வெளியாட்கள் தயார் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

இனிமேல், பிரசாதங்கள் அனைத்தும், கோவில் அர்ச்சகர்களின் முன்னிலையில் மட்டுமே நடக்கும். கோவில் பிரசாதங்களில் தேவையில்லாத பொருட்களை கலப்படம் செய்து, சர்வதேச அளவில் கோவில்களை அவமதிக்கும் முயற்சிகள் நடக்கின்றன,’ எனக் கூறினார்.

மதுரா கோவில் நிர்வாகமும் பழங்கள், பூக்கமள் மற்றும் பிற இயற்கை பொருட்களை வைத்து தயாராகும் பிரசாதங்களுக்கு பதிலாக, பழமையான முறையில் பிரசாதங்களை வழங்க முடிவு செய்துள்ளது.

அதேபோல, உத்தரபிரதேசத்தில் உள்ள மன்கமேஸ்வரர் கோவில், அனுமன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பிரசாதங்களை தயாரிக்கும் முறைகளிலும் பல கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments