Monday, April 20, 2026
HomeUncategorizedதிருப்பதி பிரம்மோற்சவத்தில் 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை - தேவஸ்தானம் தகவல்

திருப்பதி பிரம்மோற்சவத்தில் 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை – தேவஸ்தானம் தகவல்

திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து, தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாட்களில் ரூ.50க்கும் விற்கப்படும் சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்பனையானது. கடந்த ஆண்டிலும் இதே அளவிலான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உண்டியல் வசூல் ரூ.26 கோடி. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி அதிகம் வசூலானது. 

இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

பக்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்க 45 டாக்டர்கள், 60 மருத்துவ பணியாளர்கள் பணியில் இருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments